தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள மலைக்குகைக்குள் கடந்த 9 நாட்களாக சிக்கியுள்ள 12 கால்பந்து விளையாட்டு வீரர்களையும், ஒரு பயிற்சியாளரை மீட்கும் பணியில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் கடந்த மாதம் 23ஆம் நாள் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மலைப்பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக அங்குள்ள குகை ஒன்றில் ஒதுங்கிய போது அதனுள் சிக்கிக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெள்ளம் காரணமாக அவர்கள் குகைக்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுவதுடன், அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் கடந்த பல நாட்களாக தொடர்கின்றது.
சுமார் 1000 பேர் கொண்ட மீட்புக்குழுவினர் மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதுடன், சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து குகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டும் தேடுதல் நடவடிக்கை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் சிக்கியுள்ள பகுதியை நெருங்கிவிட்டதாக தெரிவித்துள்ள மீட்புக்குழுவினர், மழை காரணமாக குகைக்குள் தண்ணீர் அதிகமாக வருகிறது. இதனால், மீட்புப்பணி தாமதமாகிறது என கூறியுள்ளனர்.