இந்தியச் செல்வந்தரும், தொழிலதிபருமான நிரவ் மோடிக்கு எதிராக “இன்ரப்போல்” எனப்படும் அனைத்துலகக் காவல்துறை கைது ஆணை பிறப்பித்துள்ளது.
2 பில்லியன் டொலருக்கு அதிகமான வங்கி மோசடி வழக்கில் முக்கியச் சந்தேக நபராக நிரவ் மோடியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இந்தியாவின் மிகப் பெரிய வங்கி மோசடி என்றும் அது கருதப்படுகின்றது.
இந்த நிலையில் தலைமறைவாகியுள்ள நிரவ் மோடியைத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்யும் சிவப்பு அறிக்கையை வெளியிடுமாறு அனைத்துலகக் காவல்துறையை இந்தியாவின் மத்தியக் காவல்துறை கடந்த மாதம் கேட்டுக் கொண்டது.
அதன் விளைவாக அனைத்துலகக் காவல்துறை நிரவ் மோடிக்கு எதிராக தற்பேலாது கைது ஆணை பிறப்பித்துள்ளது.