ரஷியாவில் நடந்து வரும் உலக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் இன்று மெக்சிகோ – பிரேசில் அணிகள் மோதின. பிரபல வீரர் நெய்மர் அங்கம் வகிக்கும் பிரேசில் அணி மீது பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்ப்பார்ப்பை சிறிதும் நோகடிக்காமல் பிரேசில் அணி சிறப்பாக விளையாடியது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை என்றாலும் பிரேசில் கட்டுப்பாட்டில் பந்து இருந்தது. இதனை அடுத்து, இரண்டாம் பாதியின் 51வது நிமிடத்தில் நெய்மர் அசத்தலாக கோல் அடித்தார். 90 வது நிமிடத்தில் பிரேசில் அணியின் பிர்மிடோ மற்றொரு கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் பிரேசில் அணி 2-0 என்ற கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் அணிகள் நாக் அவுட் சுற்றில் வெளியேறியதால், பிரேசில் அணியும் வெளியேறும் என பலர் கணித்த நிலையில், அவர்களின் கணிப்பு பொய்யாகியுள்ளது.