இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பால்டால் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பால்டால் பகுதியில் இருந்து அமர்நாத் யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிற நிலையில், கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் பெய்து வரும் கனத்த மழையால் சிரமங்கள் எதிர்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பால்டால் பகுதியில் உள்ள பிராரிமார்க் என்ற இடத்தில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரு பெண் மற்றும் 4 ஆண்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டுள்ளதுடன், காயமடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.