யோர்க் பல்கலைக்கழக மாணவரான 21 வயது ஈழத் தமிழ் இளைஞர் வேனொஜன் சுதீசன்(Venojan Suthesan) கடந்த மே மாதம் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில், அவரது குடும்பத்தாரால் இன்று மாலை ஊடக மாநாடு ஒன்று நடாததப்டவுள்ளது.
குறித்த அந்த கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை போதிய ஆதாரங்கள் சாட்சியங்கள் கிடைக்காத நிலையில், அவற்றை பெற்றுத் தருமாறு வலிறுத்தவே இநத் ஊடக மாநாடு ஒழுங்க செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்காபரோவைச் சேர்ந்த 21 வயது பல்கலைக்கழக மாணவரான வேனொஜன் சுதீசன்(Venojan Suthesan) கடந்த மே மாதம் 27ஆம் நாள் இரவு, Tapscott வீதி மற்றும் Washburn Way பகுதியில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றின் வெளியே மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் தொடர்பில் சில அடிப்படைத் தகவல்களையும், சந்தேக நபர் குறித்த சிறு அடையாளங்களையும வெளியிட்டிருந்த காவல்துறையினர், தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், கொலையாளியைக் கைது செய்வதற்கான போதிய ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலையிலேயே அவரது குடும்பத்தாரால் இந்த ஊடக மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை ஐந்து மணிக்கு நடைபெறவுள்ள இந்த ஊடக மாநாட்டில், ரொரன்ரோ காவல்துறையின் மனித கொலை தொடர்பிலான சிற்பபு விசாரணைப் பிரிவு அதிகாரிகள், ரொரன்ரோ நகரமன்ற உறுப்பினர் நீதன் ஷான், குற்த்த தடுப்பு பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.