மெக்சிகோ நாட்டு நகர் பகுதியில் உள்ள பட்டாசு சந்தையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த நாட்டின் மத்திய பகுதியில் மிகப் பெரிய பட்டாசுச் சந்தை அமைக்கப்பட்டுளதுடன், அதிகளவில் பட்டாசு விற்பனை நடைபெறும் அந்த இடத்தில் பட்டாசுகளை வாங்குவதற்கு மக்கள் பெருமளவில் கூடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பட்டாசு சந்தையில் இன்று காலை 9.15 மணியளவில் இந்த வெடி விபத்துச் சம்பவித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இதுவரையில் 19பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, காயமடைந்த பலர் மீட்புப் படைப் பணியாளர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டும் மெக்சிக்கோ நகரை அண்டிய ஒரு இடத்தில் பட்டாசு சந்தையில் ஏற்பட்ட விபத்தில் 40இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.