இந்திய வங்கிகளில் மோசடியில் ஈடுபட்ட வழக்கினை எதிர்கொண்டுள்ள விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக பிரித்தானியாவில் உள்ள சொத்துக்களை முடக்க இலண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, அதனைத் திருப்பிச் செலுத்தாது பிரித்தானியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய மீதித் தொகையை வட்டியுடன் விஜய் மல்லையா செலுத்தியே தீர வேண்டும் என்று கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி விஜய் மல்லையாவிடம் 10 ஆயிரம் கோடி மீதியை வசூலித்து தரும்படி கோரி 13 இந்திய வங்கிகள் பிரித்தானியாவின் உயர் வணிக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
இந்த வழக்கு விசாரணையிலேயே பிரித்தானியாவில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை முடக்குமாற நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.