கடந்த மாதத்தில் கனடாவில் புதிதாக ஏறக்குறைய 32,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்து்ளள போதிலும், வேலை வாய்ப்பற்றோர் தொகை ஆறு சதவீதமாக அதிகரித்துள்ளது.
கனேடிய புள்ளிவிபரத் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, யூன் மாதத்தில் ஒன்ராறியோவில் 35,000 பேருக்கும், சாஸ்காச்சுவானில் 8,300 பேருக்கும், மனிட்டோபாவில் 4,100 பேருக்கும் புதிதாக வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
கனேடிய பொருளாதாரம் கடந்த மாதத்தில் 32,000 பேருக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ள போதிலும், நாட்டின் ஆளணி தொகையில் 75,600 பேர் புதிதாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இருந்த போதிலும் கடந்த 2012ஆம் ஆண்டின் பின்னர் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலானோர் வேலை தேடிய மாதமாக இது கணிக்கப்படுகிறது.
இவ்வாறு வேலை தேடுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து்ளளதன் காரணமாக, கடந்த மாதத்தில் நாட்டின் வேலையற்றோர் வீதம் 0.2 சததீதத்தினால் அதிகரித்து ஆறு சதவீதத்தினை எட்டியுள்ளது.