இலங்கை சனாதிபதியின் புதிய செயலாளராக முன்னாள் மூத்த நிர்வாக அதிகாரியான உதய செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் சனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து அவர் தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டதாக சனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சனாதிபதியின் செயலாளராக பணியாற்றிய ஒஸ்டின் பெர்னாண்டோ நேற்று பதவி விலகிய நிலையில், புதிய செயலாளராக உதய செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டதாரியான அவர், அந்தப் பல்கலைக்கழகத்தில் தொடர்பாடல் துறையில் முதுமானிப் பட்டத்தையும் பெற்றுள்ளதாக சனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.