நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் யோசனைக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, தேசிய சட்ட ஆணையத்திற்கு தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.
இதனிடையே எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமுமம் இதே முடிவை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி, நாடு முழுவதும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாளுமன்ற தேர்தலும், மாநில அளவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் நாடானளுமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டாலும், சட்டமன்ற தேர்தல் நடாத்தப்படுவது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.