பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
இலண்டன் சொகுசு குடியிருப்பு வளாகம் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுக்காக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் இருவரும் ஊழல் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு நீதிமன்றம், மரியத்துக்கும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இருபது இலட்சம் பவுண்ட் அபராதமும் விதித்துள்ளது.
அத்துடன் மரியம் இனி தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கிகின் விசாரணைகளை கடந்த யூலை மாதம் மூன்றாம் நாள் முடித்துக் கொண்ட ஊழல் தடுப்பு நீதிமன்றம், தீர்ப்பை ஒத்தி வைத்திருந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ளது.