பூட்டான் பிரதமர் டாஷோ ட்ஷெரிங் டோக்பே 3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா சென்றுள்ளார்.
நேற்றைய நாள் இந்தியாவைச் சென்றடைந்த அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதனைத் தொடகர்ந்து இன்று காலையில் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரையும் சந்தித்து பல்வேறு வியடங்கள் தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளார்.
டோக்லாம் எல்லை விவகாரம் உட்பட இந்தியா – பூட்டான் இடையிலான பல்வேறுகட்ட உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இந்த சந்திப்புக்களில் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.