முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்றும், அவரால் எந்தவிதத்திலும் தங்களுக்குத் தொந்தரவு இல்லை எனவும் மலேசியா பிரதமர் மகாதிர் முகம்மது திட்டவட்டமாக இன்று அறிவித்துள்ளார்.
தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாகவும் ஜாகீர் நாயக் மீது குற்றஞ்சாட்டியுள்ள இந்திய புலனாய்வு அமைப்பு, அவரைத் தேடியும் வந்துள்ளது.
இந்த நிலையில் மலேசியாவில் இருக்கும் ஜாகீர்நாயக்கை நாடுகடத்த வேண்டும் என்று இந்திய அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கோரிக்கையை மலேசியா நிராகரித்துள்ளது.
ஜாகீர் நாயக் மலேசியா நாட்டில் நிரந்தர குடியுரிமை பெற்று இருக்கிறார் என்பதனால், இந்தியாவுக்கு ஜாகீர் நாயக்கை திருப்பி அனுப்பமாட்டோம் என்றும் மலேசியா பிரதமர் மகாதிர் முகமது தெரிவித்துள்ளார்.