ஈட்டோபிக்கோ பகுதியில் இன்று காலை வேளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கார்டினர் அதி விரைவுச் சாலையில், இஸ்லிங்டன் அவினியூவுக்கு அண்மித்த பகுதியில், இன்று காலை ஐந்து மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாகனம் ஒன்று கவிழந்து விபத்துக்குள்ளானதாகவும், வானத்தினுள் சிக்கியிருந்த நபரை வெளியேற்றவதற்கு அரை மணி நேரங்களுக்கும் மேலாக நேரம் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட நபர் பாரதூரமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்கை பெற்று வருவதாக கூறப்படுகிறது.