மருத்துவத்துறை மாணவி நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.
டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் நாள் இரவு, ஓடும் பேருந்தில் மருத்துவதுறை மாணவியான நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த 6 குற்றவாளிகள் மீதும் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், அவர்களுள் ஒருவன் சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனையுடன் தப்பியுள்ளதுடன், முக்கிய குற்றவாளி ராம்சிங் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்ட நிலையில், ஏனையவர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
அதனைத் தெபாடர்ந்து மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தமக்கான மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்தனர்.
இந்த நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலா அமர்வு, அவர்களின் மனுக்களை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளதால் அவர்களின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தவறை கண்டறிவதில் குற்றவாளிகள் தோல்வியடைந்து விட்டனர் என்றும், தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளால் மேல்முறையீடு செய்ய முடியுமே தவிர, தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோர முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.