முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோரை விசாரணை வரம்புக்குள் கொண்டு வரும் “லோக் ஆயுக்தா” என்று குறிப்பிடப்படும் சட்டமூலம் தமிழக சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் செய்யும் ஊழல்களை விசாரிப்பதற்காக “லோக் ஆயுக்தா” அமைப்பை அமைக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில், சில மாநிலங்கள் அதனை அமைக்காது இழுத்தடிப்பு செய்து வந்துள்ளன.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதுடன், குறித்த அமைப்பை அமைக்குமாறு குறிப்பிட்ட மாநிலங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க்பபட்டுள்ளது.
குறித்த அந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில் தமிழக அரசு இன்று “லோக் ஆயுக்தா ” என்ற அமைப்பை அமைப்பதற்கான சட்டமூலத்தை சட்டசபையில் முன்வைத்து நிறைவேற்றியுள்ளது.