தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி இன்று இரண்டாவது நாளும் நடைபெற்ற நிலையில், மேலும் நான்கு சிறுவர்கள் பத்திரமாக குகையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று மீட்கப்பட்ட 4 சிறுவர்களுடன், இன்று மீட்கப்பட்ட நான்கு சிறுவர்களும் மருத்துவமனையில் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று ஒன்பது மணி நேரங்களாக மீட்புப் பணி நடைபெற்றது என்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மீட்புப் பணியைக் காட்டிலும் இன்று இரண்டு மணி நேரம் விரைவாக நடைபெற்றது என்றும் மீட்புப் பணியின் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணியில் அனைத்துலக முக்குளிப்பு வீரர்கள் 18 பேர் ஈடுபட்டதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்த மீட்கும் பணி நாளை காலை வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், குகையில் மீதமுள்ள நான்கு சிறுவர்களும் ஒரு பயிற்சியாளரும் நாளை மீட்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்லாந்து பிரதமர் நரோங் சக்கோ சட்டனாக்கோன், சம்பவ இடத்துக்கு சென்று தனது ஆதரவை தெரிவித்துள்ளதோடு, அங்கிருந்த அனைத்துலக முக்குளிப்பு வீர்ர்கள், தன்னார்வலர்கள், மற்றும் மீட்புப் பணியாளர்களையும் சந்தித்து பேசியுள்ளார்.