மிசிசாகா பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெடுஞ்சாலை 403 இன் கிழக்கு நோக்கிய வழித்தடத்தில், Mavis வீதிப் பகுதியில், இன்று பிற்பகல் 2.20 அளவில் இந்த விபத்து சம்பவித்து்ளளது.
நெடுஞ்சாலையின் வலது கரையோரத்தில் பழுதடைந்த நிலையில் திருத்த வேலைகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஊர்தி ஒன்றின் மீது, அந்த வழியே சென்ற கழிவு சேகரிக்கும் கொள்கலனுடனான வாகனம் மோதியதில் இந்த விபத்து சம்பவித்து்ளளது.
இந்த விபத்தின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிராபத்தான நிலையிலும், மற்றையவர் பாரதூரமான காயங்களுடனும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதாக அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் அவர்களில் ஒருவரான மில்ட்டன் பகுதியைச் செர்ந்த 27 வயது ஆண் ஒருவர், சிறிது நேரத்தின் பின்னர் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது விதியில் எண்ணெயும் சிந்தியுள்ள நிலையில், துப்பரவு பணிகள் மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்காக அந்த பகுதி ஊடான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்ட போதிலும், சில மணி நேரங்களின் பின்னர் அவை மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளன.