ஆப்கானிஸ்தானில் இன்று இடம்பெற்றுள்ள குண்டுவெடிப்பு ஒன்றில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் நகரில் அமைந்துள்ள கல்வித்துறை அலுவலகம் அருகே அந்த குண்டு வெடித்தததாக கூறப்பட்டுள்ளது.
இதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் காயமடைந்த 10இற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நேற்றைய நாள் ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் மேற்கொள்ள்பபட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.