தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையில் 11 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்திடப்பட்டுள்ளன.
இந்தியா – தென்கொரியா விரிவான கூட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவது, தொலைத்தொடர்பு, உயிரி தொழில்நுட்பம் மற்றும் உயிரி பொருளாதாரம் போன்ற துறைகளில் இரண்டு நாடுகளும் ஒத்துழைப்பு வழங்குவது உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கியதாக இந்த ஒப்பந்தங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதற்கு முன்னராக தென்னாபிரிக்க அதிபரும், இந்தியப் பிரமரும், அவர்களுடன் இரண்டு நாடுகளின் அதிகாரிகளும் பங்கேற்ற சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
சந்திப்பிற்கு பின்னர் இரண்டு நாடுகளின் தலைவர்களும் கூட்டாக ஊடகவியலாளரையும் சந்தித்தனர்.
இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கம் தொடர்பில விபரித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்றும் உறுதியளித்து்ளளார்.
இந்தியப் பிரதமரைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன், இந்தியா – தென் கொரியா இடையே கடந்த 45 ஆண்டுகளாக நல்லுறவு நிலவி வருகிறது என்றும், எதிர்கால வளர்ச்சியை தோற்றுவிக்கும் நோக்கில் இரண்டு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் சிறந்த ஒத்துழைப்பை நல்கும் எனவும் கூறியுள்ளார்.