பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் இந்த யூலை மாதம் 25ஆம் நாள் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு கட்சிகள் ஒவ்வொன்றும் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் தேசிய அவாமி கட்சியின் வேட்பாளர் ஒருவரின் பரப்புரை கூட்டம் இன்று நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை அதற்குள் நுளைந்த தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாங்கள் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இன்றைய இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.