சனாதிபதித் தேர்தலுக்கு செல்லாமல், இலங்கையின் அரசியலமைப்பை மறுசீரமைத்து, முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் திட்டம் தொடர்பில் தமது தரப்பு கவனம் செலுத்தி வருவதாக சனநாயக இடதுசாரிக் கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அதன் பிரதான செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.
சனாதிபதித் தேர்தல் நடைபெறுமாயின் சனாதிபதி வேட்பாளர் யார் என்பதை ஒன்றிணைந்த எதிர்கட்சியினரும், மகிந்த ராஜபக்சவும் இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும் நாடாளுமன்றத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் எண்ணமே தமக்கு உள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.