சீனாவில் இருந்து 200 பில்லியன் டொலர் அளவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 10தகவீதம் வரி விதிப்பதற்கான நடவடிககையை தொடங்கியள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஏற்கனவே சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா வரிவிதிப்பினை மேற்கொண்டுள்ள நிலையில், இது சீனப் பெருட்களுக்கு வரிவிதிப்பை மேற்கொள்ளும் அமெரிக்காவின் இரண்டாவது நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அமெரிக்கா சீனப்பொருட்களின் இறக்குமதிக்கு முதலாவது வரி அதிகரிப்பினை மேற்கொண்டதைத்த் தொடர்ந்து, சீனாவும் குறிப்பிட்ட அமெரிக்க இறக்குமதிகளுக்கான வரிவிதிப்பினை மேற்கொண்டது.
அப்போது அமெரிக்காவில் இருந்து 34 பில்லியன் டொலர் அளவுக்கான இறக்குமதிக்கு வரி விதிக்கப்படுவதாக அறிவித்த சீனா, மேலும் 16 பில்லியன் டொலர் அளவுக்கான இறக்குமதிக்கும் வரி விதிக்கவுள்ளதாகவும் சீனா எச்சரித்திருந்தது.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாகவே தற்போது சீனாவில் இருந்து மேலும் 200 பில்லியன் டொலர் அளவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 10தகவீதம் வரி விதிபதபதற்கான அறவிப்பை அமெரிக்கா விடுத்துள்ளது.
இந்த வரிவிதிப்புக்களால் இரண்டு பொருளாதார வல்லரசு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்க்பபடுகிறது.