மக்கள் நீதிமய்ய கட்சி இன்று தனது புதிய நிர்வாகிகளை நியமித்துள்ள நிலையில், அந்த கட்சியின் துணைத்தலைவராக ஞானசம்பந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி 21ஆம் நாள் நடிகர் கமல்ஹாசனினால் தொடங்கப்பட்ட மக்கள் நீதிமய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கடந்த வாரம் முறைப்படி அங்கீகாரம் வழங்கியதை அடுத்து இந்த நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று பகல் கட்சிக்கொடியை ஏற்றிவைத்த கமல் கமல்ஹாசன், பின்னர் பழைய உயர்நிலைக்குழுவை கலைத்துவிட்டு புதிய நிர்வாகிகளை முறைப்படி அறிவித்துள்ளார்.
இதன்போது மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்த இயக்க வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றியதாகவும், இனி அந்தக் குழுவில் இருந்த 11 பேரும் செயற்குழு உறுப்பினர்களாக இருந்து கட்சியை வழி நடத்துவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கட்சியின் துணைத்தலைவராக ஞானசம்பந்தன், செயலாளராக அருணாச்சலம், பொருளாளராக சுகா ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள அவர், செயற்குழு உறுப்பினர்களாக கமீலா நாசர், மெளரியா, பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.