யப்பானில் பெய்த கடும் மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ நெருங்கியுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
30 ஆண்டுகளில் கண்டிராத ஆக மோசமான பேரிடரில், காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும் பணி இன்னமும் தொடர்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
1982ஆம் ஆண்டு யப்பானில் பெற்ற பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மோசமான சேதத்தை ஏற்படுத்திய 26 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதே அங்கு மீண்டும் அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டுள்ளதாக விபரிக்க்பபட்டுள்ளது.
கனமழையால் ஒகாயமா, ஹிரோஷிமா, யாமாகுச்சி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒகாயமா பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பெரும்பாலான இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதுடன், பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன என்றும், இவற்றின் தாக்கத்தால் இதுவரை 86 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிகக்பபடுகிறது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக மீட்பு படையினர், இராணுவத்தினர் என்று 70 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
வெள்ள நிலைமை மிக மோசமாக இருப்பதால் பிரதமர் ஷின்சோ அபே தனது வெளிநாட்டு பயணத்தை நிறுத்தி வைத்துவிட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு வருகிறார்.