ஹமில்ட்டன் பகுதியில் இளம் சிறுவர் ஒருவர் தீடீரென உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Young street மற்றும் John street பகுதியில் அமைந்துள்ள அடுக்கு மாடிக குடியிருப்பு ஒன்றில், நேற்று மாலை ஐந்து மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் வெளியே சடலம் காணப்ப்டடதாகவும், அங்கு விரைந்த அதிகாரிகள் கட்டிடத்தின் மேல் தளங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததை காணக்கூடியதாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
குறித்த அந்த மாடிக் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து வீழந்தே அந்த சிறுவர் உயிரிழந்ததாக, சம்பவ இடத்திலிருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் அதிகாரிகளால் இந்தச் சம்பவம் தொடர்பில் விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடவில்லை.
உயிரிழந்த சிறுவரின் பெயர் வயது உள்ளிட்ட விபரங்களும் வெளியிடப்படாத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.