ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாரா மாகாணத்தில் இருக்கும் சோதனைச்சாவடியில் இன்று இந்த திடீர்த் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சோதனைசாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்குப் பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடாத்தியதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ள அந்த மாகாண ஆளுநரின் செய்தித்தொடர்பாளர், தலிபான் இயக்கமே இந்த தாக்குதலை நடாத்தியதாகவும் கூறியுள்ளார்.
எனினும் இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு உள்ளிட்ட எந்த அமைப்புக்களும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை.