அண்மையில் அமெரிக்க அதிபர் அறிமுகப்படுத்திய வரி விதிப்பு உள்ளிட்ட வர்த்தக நெருக்கடிகளால் கனேடிய ஏற்றுமதியாளர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு முகம் கொண்டுத்துள்ள நிலையில், அதற்கு முன்னரே அவர்கள் NAFTA பேச்சுக்களால் பாதிப்புகளை எதிர்கொண்டதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன.
NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு குறித்த பேச்சுக்கள் தமக்கு பாதகமான விளைவுகைளயே ஏற்படுத்தி வந்ததாக பெருமளவான கனேடி ஏற்றுமதியாளனர்கள் தெரிவித்துள்ளனர்.
கனேடிய ஏற்றுமதியாளர்கள் ஆயிரம் பேரிடம் நடாத்தப்பட்ட இந்தக் கருத்க் கணிப்பில், NAFTA பேச்சுக்கள் அவர்களின் நடவடிக்கைகளில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாக 28 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் நடாத்தப்பட்ட இதேபோன்ற கருத்துக் கணிப்பின் போது, இவ்வாறான கருத்துகளை 23 சதவீதம் பேர் வெளியிட்டிருந்த நிலையில், இம்முறை அது 28 சதவீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் ஒட்டுமொத்த அளவிலான வர்த்தக நம்பிக்கையானது 73.5 சதவீதத்தில் இருந்து 76.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், கருத்துக் கணிப்பினை மேற்காண்ட அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.