சீனாவில் பெய்து வரும் கனமழையால் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
24 மாகாணங்கள் இந்த பாதிப்புககளை எதிர்கொண்டுள்ளதாகவும், அங்கு ஆற்றங்கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் முழ்கியுள்ளதால் தரைவழிப் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.
மழை தொடர்பான விபத்துக்களில் 15 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 4 பேரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
மழை பாதிப்பு பகுதிகளில் பேரிடர் மீட்புக்குழுவினர் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மழை வெள்ள பாதிப்பு காரணமாக 387 கோடி டொலர் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டிருப்பதாக அரசு ஊடகங்கள் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.