தூக்குத் தண்டனையை மீளவும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் விளக்கமளிக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 8ஆம் நாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் ஜெனீவாவில் ஆரம்பமாக உள்ளன.
இலங்கயில் தூக்குத் தண்டனையை இல்லாது செய்வது தொடர்பில் கடந்த 2015ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை அரசாங்கம் உறுதிமொழி வழங்கியிருந்தது.
இதனால் எதிர்வரும் மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, இலங்கையில் தூக்குத் தண்டனையை மீளவும் நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படும் தீர்மானம் தொடர்பில் விளக்கமளிக்க நேரிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் மீளவும் தூக்குத் தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் ஐந்து மனித உரிமை அமைப்புக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.