பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரின் மகள் மகள் மரியம் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டு்ள்ளனர்.
ஊழல் குற்றச்சாட்டில் நவாஸ் ஷெரீஃபிற்கு பத்தாண்டுகள் சிறைத் தண்டனையும், மகளிற்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில் பிரித்தானியாவில் இருந்த அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
நவாஸ் நாடு திரும்பும்போது ஏற்படும் நிலைமையை கட்டுப்படுத்த ஆயிரக் கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும்,
அவரின் வருகையை ஒட்டி கூடிய அவரின் நூற்றுக்கணக்கான ஆதவாளர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை முன்னதாக தமது பயண வழியில் அபுதாபியில் இறங்கியபோது அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்தள்ள நவாஸ், மக்களை அரசு கடுமையாக ஒடுக்கிவருவதால் தற்போதைய இந்தப் பின்னணியில் பாகிஸ்தானில் நடக்கவுள்ள தேர்தலில் நம்பகத்தன்மை இல்லை என்று கூறியுள்ளார்.