ஈட்டோபிக்கோவில் உள்ள திரையரங்க கட்டிட வளாகம் ஒன்றினுள் நேற்று இரவு ஏற்பட்ட தீப்பரவலின் போது வாகனம் ஒன்று முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது.
அந்த கட்டிடத்தின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த அந்த வாகனம் மட்டும் தீக்கிரையான நிலையில், அந்தச் சம்பவத்தினை சந்தேகத்திற்கிடமானதாக வகைப்படுத்தியுள்ள காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Queensway மற்றும் Islington Avenue பகுதியில் அமைந்துள்ள குறித்த அந்த கட்டிடத்தில், நள்ளிரவுக்கு சற்று முன்பாக, 11.30 அளவில் இந்த தீப்பரவல் சம்பவித்துள்ளது.
தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில், குறித்த அந்த வாகனம் முற்றாக தீக்கிரையாகி விட்டிருந்ததாகவும், எனினும் அந்த வாகனத்தினுள் எவரும் காணப்படவில்லை என்றும், எவரும் காயமடைந்ததாகவும் முறைப்பாடுகள் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திலிருந்து குறித்த அந்த வாகனம் அகற்றப்பட்டுள்ள போதிலும், சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.