இலங்கைக்கு கஞ்சா கடத்தியதாக கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேரை சிறிலங்கா கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.
இந்த மீனவர்கள் சென்ற படகை சிறிலங்கா கடற்படையினர் கண்டு வழிமறிக்கச் சென்ற போது,படகில் இருந்தவர்கள் சில பொட்டலங்களை கடலில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.
கடலில் எறியப்பட்ட அந்த பொட்டலங்களை உடனடியாக மீட்டு சோதனை செய்த படையினர் அந்தப் பொட்டலங்களுக்குள் 40 கிலோ கஞ்சா இருந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்தே குறித்த 4 மீனவர்களையும் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.