அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்டோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளனர்.
இன்று மதிய வேளை நடைபெற்ற சந்திப்பின் பின்னர், சிறை முன்பு ஊடகவியலாளருக்கு கருத்துத் தெரிவித்த தினகரன், 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் செல்லாது என்ற தீர்ப்பு நிச்சயம் வரும் என்றும், அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனவும், அப்போது அந்த 18 பேரும் முதலமைச்சரை மாற்ற கோருவார்கள் எனவும் கூறியுள்ளார்.
ஆனால் தான் ஆட்சி வேண்டாம் என்று சொல்வதாகவும், துரோகத்தை கருவோடு அறுக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இதை தாம் கூறுவதாகவும் தெரிவித்துள்ள தினகரன், தியாகம், தர்மம் யார் பக்கம் இருக்கிறதோ அவர்களுக்கு இயற்கையும் துணை நிற்கும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.