பிரம்டன் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பர்கிககிச் சூட்டுச் சம்பவத்தில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
விமானநிலைய வீதி மற்றும் Countryside Drive பகுதியில், நேற்று இரவு ஆறு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதனை பீல் பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இன்னமும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதனால், தற்போதைக்கு சந்தேக நபர்கள் குறி்தத விபரங்கள் எதனையும் வெளியிட முடியாவில்லை என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மனித கொலை தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.