அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஆகிய இருவருக்கும் இடையிலான முதல் உச்சி மாநாடு பின்லாந்து நாட்டின் ஹெல்ஸின்கி நகரத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
இந்த மாநாட்டின் தொடக்கத்தில் ரஷ்யாவுடன் இணைவது நல்ல ஒரு விடயம் என்றும், அது கெட்டது அல்ல எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த சந்திப்பினைத் தொடர்ந்து ரஷ்யாவுடன் நல்ல உறவை எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்க – ரஷ்ய நாடுகளுக்கு இடையேயான பதற்றத்திற்கு கடந்த நிர்வாகங்கள்தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.
தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப் , பல ஆண்டுகளாக அமெரிக்கா முட்டாள்தனமாக நடந்து கொண்டதுதான், ரஷ்யாவுடனான உறவு சீரழிந்ததற்கு காரணம் என்றும் கூறியுள்ளார்.