சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 18 இலங்கையரை அவுஸ்திரேலிய அரசாங்கம் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைத்துள்ளது.
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்று, அங்கு புகலிடம் கோரிய இந்தப் 18 பேரையும், அந்த நாட்டு அரசாங்கம் தனி விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ள நிலையில், இவர்கள் இன்று காலை கடுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர்.
அவர்களோடு பயணித்த அவுஸ்திரேலிய நாட்டு அதிகாரிகள் அடங்கிய 36 பேர் கொண்ட குழுவினர், தம்மோடு அழைத்து செல்லப்பட்ட 18 பேரையும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட 18 இலங்கை அகதிகளும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.