வடகொரியா அணு ஆயுதங்களை அழிப்பதற்கு கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இது தொடர்பில் விளக்கமளித்துள்ள அவர், வடகொரியாவுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது என்றும், அணு ஆயுதங்களை அழிக்க கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப் படவில்லை என்பதுடன், வேக உச்ச வரம்பு இல்லை என்றும், இந்த விவகாரத்தில் அவசரப்படத் தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் வடகொரியா மீதான பொருளாதார தடைகள் தொடர்கின்றன என்றும், அங்கு புதிதாக ஆயுத சோதனை எதுவும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்துள்ள அவர், இரண்டு நாடுகளுக்கிடையிலான உறவு நன்றாக இருப்பதாக நினைப்பதாகவும், அடுத்து என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் கடந்த மாதம் 12நாள் சிங்கப்பூரில் முதல் முறையாக சந்தித்து உச்ச நிலைப் பேச்சுக்களை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.