இந்திய போர்கப்பல்களை தகர்க்க ஆழ்கடலில் தீவிரவாதிகள் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் இந்திய மத்திய அரசுக்கு உளவுத்துறை தகவல் கொடுத்து எச்சரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த அந்த செய்தியில் இந்தியாவிடம் தற்போது ஐ.என்.எஸ். அரிகண்ட், ஐ.என்.எஸ். அகாட், ஐ.என்.எஸ். சக்ரா எனும் 3 நீர் மூழ்கி கப்பல்கள் உள்ளன என்றும், இவற்றை பாகிஸ்தான் இராணுவம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக கருதுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்திய போர் கப்பல்களை குறி வைத்து தாக்குதல் நடத்தும்படி தீவிரவாதிகளுக்கு, பாகிஸ்தான் இராணுவம் உத்தரவிட்டுள்ளததாகவும், இதைத் தொடர்ந்து இந்திய போர் கப்பல்களை தகர்க்க, பாகிஸ்தான் கடல் பகுதியில் உள்ள ஆழ்கடலில் தீவிரவாதிகள் இரகசிய பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதிகளே கடந்த 6 மாதமாக இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதனை டெல்லியில் உள்ள உளவுத்துறை பல்முனை ஒருங்கிணைப்பு மையம் உறுதி செய்துள்ளதாகவும், இது தொடர்பில் இந்திய மத்திய அரசுக்கு உளவுத்துறை தகவல் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.