இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 பெண்கள் உள்பட 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள மலைப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
இதன்போது மாவோயிஸ்டுகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையிலேயே மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த பகுதியில் இருந்து 3 பெண்கள் உள்பட 7 மாவோயிஸ்டுகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.