பிரிட்டிஷ் கொலம்பியாவின் தென் பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள காட்டுதீ காரணமாக, பல இடங்களிலும் மக்களை வெளியேறுமாறான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீ மற்றும் நெடுஞ்சாலை 97இன் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளமை ஆகிய காரணங்களால், பிரிட்டிஷ் கொலம்பியாவின் தென் உள்ளக பிராந்தியமான Peachland பகுதியின் பல இடங்களில் உள்ளவர்களையே இவ்வாறு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த அந்த பகுதிகளில் வதியும் அனைவரையும் வெளியேறுமாறும், வெளியேறிச் சென்ற அனைவரும் Lakeview Heightsஇல் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை முகாமில் தங்களைப் பதிந்துகொண்டு, உதவிகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கெலோனா(Kelowna) பிராந்தியத்தின் தென் பகுதியில் வதியும் பலரையும் வெளியேறுமாறான உத்தரவுகள் கடந்த புதன்கிழமையே பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த புதிய வெளியேறற் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.