பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை நீமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மாவட்ட மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனா டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.
மெதமுலன பகுதியில் கோட்டாபய ராஜபக்சவின் தந்தை டீ. ஏ ராஜபக்சவிற்கு நினைவிடம் அமைப்பதற்கும், நினைவு காட்சியகம் ஒன்றை அமைப்பதற்கும் அரச நிதியை பயன்படுத்தியதாக தெரிவித்து, குற்றவியல் விசாரணை பிரிவு கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடுத்திருந்தது.
இந்தக் குற்றச்சாட்டை எதிர்த்து கோட்டாபய ராஜபக்சவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கோட்டாபய தாக்கல் செய்த மனுவிற்கமைய குறித்த குற்றச்சாட்டிற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இரகசிய காவல் துறையினருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றினால் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்ததடையுத்தரவினை தொடர்ந்து நீடிப்பதா நிராகரிப்பதா என்பது தொடர்பிலான மீள் விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெற்ற நிலையில், இன்றையநாள் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட எழுவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் நாள் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.