தமிழில் “நீட்” தேர்வுஎழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்குவதற்கு தடைவிதித்து இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு கேள்வித்தாளில் பிழைகள் இருந்ததால், தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்குவதற்கு CBSE-க்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் குறித்த உத்தரவை எதிர்த்து CBSE மற்றும் ஏற்கனவே முதல் பட்டியலில் மருத்துவ இடம் ஒதுக்கப்பட்ட 20 மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது.
அந்த மனு இன்று விசாணைக்கு எடுத்துக்கொள்ள்பபட்ட நிலையில், தமிழில் நீட் தேர்வுஎழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்குவதற்கு தடைவிதித்து இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.