அமெரிக்காவின் மிசவுரி (Missouri)மாகாணத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு ஒன்று ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்க்பபடுகிறது.
நேற்று இரவு 30 பேருடன் “டேபிள் ரொக்” (Table Rock) ஏரியில் பயணித்துக்கொண்டிருந்த போது அந்த படகு விபத்துக்குள்ளானதாகவும், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
காயங்களுடன் மீட்கப்பட்ட 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க்பபட்டுள்ளனர் என்றும், காணாமல் போயுள்ள 5 பேரைத் தேடும் நடவடிககைகள் தொடர்வதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.