சென்னை கந்தன்சாவடி பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கட்டட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயடைந்துள்ளனர்.
தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்துவிழுந்ததில் அந்த விபத்து சம்பவித்துள்ள நிலையில், அதன் மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் இது வரையில் இடிபாடுகளில் இருந்து 32 பேர் மீட்க்பபட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துத் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள தமிழக வருவாய்துறை அமைச்சர் உதயகுமார், கட்டுமானப் பணிகளின்போது பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி இருந்தால் விபத்தை தடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
குறித்த மருத்துவமனை கட்டடக் கட்டுமானம் குறித்து ஆய்வறிக்கை வந்தவுடன், விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.