இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக, அனைத்து வகையான சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் இடைக்காலத் தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என, இலங்கை கிரிக்கெட் சபை இன்று (22) அறிவித்தது.
வீரர்களுக்கான நடத்தைக் கோவையை மீறினார் என்ற குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் முடிவடையும் வரையே, அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்ததும், இத்தடை அமுலுக்கு வருமெனவும், இப்போட்டியிலும் நாளைய (23) தினம் அவர் பங்குபற்ற மாட்டாரெனவும், கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்தது.