கொரிய போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான உடன்படிக்கையை தீவிரமாக செயல்படுத்தும்படி தென்கொரியாவை வடகொரியா அரசு வலியுறுத்தி உள்ளது.
வடகொரிய ஊடகம் வெளியிட்டுள்ள அந்த செய்தியில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கூடிய கடமை தென் கொரியாவுக்கு உள்ளதாகவும், இனியும் தாமதிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரிய போரை முறைப்படி முடிவுக்கு கொண்டு வரும் வகையிலான ஒப்பந்தம் ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் நாள் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள நிலையிலேயே வடகொரியா இவ்வாறு வலியுறுத்தியுள்ளது.
இதன் பின்னர் வடகொரியத் அதிபர் கிம் யொங் உன்னிற்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இடையில் வரலாற்றுச் சிறப்ப மிக்க உச்ச நிலைச் சந்திப்பு கடந்த யூன் மாதம் 12ஆம் நாள் சிங்கப்பூரில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.