இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது போட்டியில், இன்றைய (23) தினம் வெற்றியைப் பதிவுசெய்தமையின் மூலமே, இத்தொடர் வெற்றியை இலங்கை பெற்றது.
இரண்டாவது போட்டியை வெல்வதற்கு, மேலும் 351 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், வெறுமனே 5 விக்கெட்டுகளைக் கைவசம் வைத்துக்கொண்டு இன்றைய நாளை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுக்க 119 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றது. துடுப்பாட்டத்தில், தெயூனிஸ் டி ப்ரூன் 101, தெம்பா பவுமா 63, டீன் எல்கர் 37 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ரங்கன ஹேரத் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இப்போட்டியின் நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும், தொடர் முழுவதும் இலங்கைக்காகச் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய திமுத் கருணாரத்ன தெரிவானார்.
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 338/10 (துடுப்பாட்டம்: தனஞ்சய டி சில்வா 60, தனுஷ்க குணதிலக 57, திமுத் கருணாரத்ன 53, அகில தனஞ்சய ஆ.இ 43, ரங்கன ஹேரத் 35 ஓட்டங்கள். பந்துவீச்சு: கேஷவ் மஹராஜ் 9/129)
தென்னாபிரிக்கா: 124/10 (துடுப்பாட்டம்: பப் டு பிளெஸி 48, குயின்டன் டி கொக் 32 ஓட்டங்கள். பந்துவீச்சு: அகில தனஞ்சய 5/52, டில்ருவான் பெரேரா 4/40)
இலங்கை: 275/5 (துடுப்பாட்டம்: திமுத் கருணாரத்ன 85, அஞ்சலோ மத்தியூஸ் 71, தனுஷ்க குணதிலக 61, றொஷேன் சில்வா ஆ.இ 32 ஓட்டங்கள். பந்துவீச்சு: கேஷவ் மஹராஜ் 3/154)
தென்னாபிரிக்கா: 290/10 (துடுப்பாட்டம்: தெயூனிஸ் டி ப்ரூன் 101, தெம்பா பவுமா 63, டீன் எல்கர் 37 ஓட்டங்கள். பந்துவீச்சு: ரங்கன ஹேரத் 6/98)