இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக அங்கு தொடரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மழை பாதிப்பு பகுதிகளில் பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை கனமழையால் அந்த மாநிலத்தின் மகாநதி மற்றும் பைடாராணி ஆறுகளில் வெள்ளம் பெறுக்கெடுத்து ஓடுவதாகவும் எச்சரிக்க்பபட்டுள்ளது.
இந்த நிலையில் எந்த ஒரு அவசரநிலைமையையும் சமாளிக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தயார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு மநில முதலமைச்சர் நவின் பட்னாயக் அறிவுறுத்தியுள்ளார்.