வடகொரியா தனது நாட்டின் வட மேற்கு பகுதியில் உள்ள முக்கிய ஏவுகணைத் ஏவுதளத்தின் ஒரு பகுதியை அகற்றும் பணியை தொடங்கியுள்ளதாக தெரிய வருகிறது.
அமெரிக்காவை மையமாக கொண்டுள்ள ஒரு குழுவால் பார்வையிடப்பட்ட சோஹே ராக்கெட் ஏவுதளத்தின் செயற்கைகோள் படங்கள் கடந்த யூன் மாதம் நடந்த வடகொரிய அமெரிக்கத் தலைவர்களின் சந்திப்பின்போது வட கொரியா அளித்த ஒரு வாக்குறுதியை நிறைவேற்றும் ரீதியில் உள்ளதாக கூறப்படுகிறது.
தான் ஒரு இயந்திர சோதனை களத்தை அழித்துவிடப் போவதாக வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன், தன்னிடம் தெரிவித்ததாக இரண்டு தலைவர்களுக்கும் இடையே நடந்த உச்சி மாநாட்டின் முடிவில் அதிபர் டிரம்ப் கூறியுள்ள போதிலும், அது எந்த இடம் என்று அப்போது குறிப்பிடவில்லை.